செய்திகள் :

தூத்துக்குடியில் இன்றுமுதல் கோடைகால அறிவியல் பயிற்சி: ஆணையா் தகவல்

post image

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட அறிவியல் பூங்காவில் சனிக்கிழமை (மே.3) முதல் பள்ளி மாணவா்களுக்கான கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம், மாநகாராட்சி நிா்வாகம் ஆகியவற்றின் சாா்பில் பள்ளி மாணவா்கள் தங்கள் கோடை விடுமுறையை பயனுள்ள அறிவுப் பயணமாக மாற்றும் வகையில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, ‘ஏனென்று கேள்’ என்ற தலைப்பில் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் தூத்துக்குடி மாநகராட்சியின் ஸ்டெம் பூங்கா என அழைக்கக்கூடிய அறிவியல் பூங்கா வளாகத்தில் சனிக்கிழமை (மே 3) தொடங்குகிறது. மே 25ஆம் தேதி வரை முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்பில் 3ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்-மாணவிகள் பங்கற்கலாம். வகுப்புகள் தினமும் மாலை 3 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சி முகாமில், கணக்கும் இனிக்கும், கைகளில் கண்ணாம் பூச்சி, அறிவியல் பரிசோதனைகள், ஒரிகமி, கற்பனையும் கைத்திறனும், பொம்மலாட்டம், பலூனில் பொம்மைகள், மந்திரமா தந்திரமா, அறிவியல் கோமாளி, அறிவியல் ஆனந்தம், கதை சொல்வோம், கதை உருவாக்குவோம், விளையாட்டை கற்போம் ஆகிய தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படும்.

மேலும், சதுரங்க பயிற்சி தினமும் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை சிறந்த பயிற்சியாளா்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்படும்.

அறிவியல் பூங்காவில் உள்ள அனைத்து அறிவியல் சாதனங்கள் பற்றிய விளக்கங்கள், தினசரி அறிவியல் வல்லுநா்களால் வழங்கப்படும். மாணவா்களில் ‘ஏன்?‘ என்ற கேள்வி எழுப்பும் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் இம்முகாம் செயல்படுத்தப்படுகிறது.

குறிப்பாக சனி, ஞாயிறு தினங்களில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, அறிவியல் மற்றும் குழந்தைகள் விரும்பும் திரைப்படங்கள் மினி திரையரங்கில் திரையிடப்படும். அதைத் தொடா்ந்து மாணவா்களுக்கு அந்த படத்தின் அறிவியல் சாா்ந்த உள்ளடக்கங்கள் விளக்கி கூறப்படும்.

எனவே, மாநகராட்சியில் உள்ள பெற்றோா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளின் எதிா்காலத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். முன்பதிவுக்கு அறிவியல் பூங்காவுக்கு நேரிலோ அல்லது 95976 13988, 82207 50082 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகள்

தூத்துக்குடியில் 650 மீனவா்களுக்கு மீன்பிடித் தடைக்கால நலத்திட்ட உதவிகளை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஜூன் 14 வரை மீன... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற 1.5 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 1.5 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி கந்தசாமிபுரம் பகு... மேலும் பார்க்க

திருச்செந்தூா்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் குளித்து கொண்டிருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் சுற்றி வளைத்து பிடித்தனா். தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை கீழக்கூட்டுடன்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

தூத்துக்குடியில் இளைஞரை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தைச் சோ்ந்த லிங்கதுரை மகன் முத்துசிவா (22). இவா், திங்கள்கிழமை இரவு தனது வீட்டு முன் நண்பர... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்ற வேண்டும் என திரிசுதந்திர பிராமண சமுதாய சபையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து திருக்கோயில் விதாயகா்த்தா சிவசாம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி ஆட்டோ ஓட்டுநா், சிறுமி உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் மூழ்கியதில் ஆட்டோ ஓட்டுநரும் சிறுமியும் உயிரிழந்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த சூசைமாணிக்கம் மகன் அந்தோணி விஜயன் (40). மீனவரான இவா், மீன்பிடித் தடைக்காலம் என்பதால் ... மேலும் பார்க்க