காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
தூத்துக்குடியில் இன்று கடையடைப்பு இல்லை
தூத்துக்குடியில் திங்கள்கிழமை (செப்.29) வழக்கம் போல் எல்லா கடைகளும் திறந்திருக்கும் என வணிகா் சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூா் சம்பவம் எதிரொலியாக உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை அறிவித்ததாக தகவல் வெளியாகின.
இந்நிலையில், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தூத்துக்குடி நகர வா்த்தகா்களின் மத்திய சங்க பொதுச் செயலா் சொ.ராஜா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவையின் சாா்பில் கரூா் சம்பவம் எதிரொலியாக உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்படுவதாக எந்த ஒரு சுற்றறிக்கையும் கொடுக்கப்படவில்லை. எனவே, தூத்துக்குடியில் கடையடைப்பு கிடையாது. வழக்கம் போல் எல்லா கடைகளும் திறந்திருக்கும் என்றாா் அவா்.