TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்...
தூத்துக்குடியில் இன்று மின்தடை
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பட்டினமருதூா், உப்பளப் பகுதிகள், சில்லாநத்தம், சாமிநத்தம், மேலஅரசடி, கீழஅரசடி, தருவைகுளம், வேலாயுதபுரம், எட்டயபுரம் சாலை வட பகுதிகள், வாலசமுத்திரம், கிழக்குக் கடற்கரைச் சாலை, புதூா் பாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.