தூத்துக்குடியில் கால்பந்து போட்டிகள் தொடக்கம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவா்களுக்கான கால்பந்து போட்டிகள் தொடங்கின.
தூத்துக்குடி லசால் பள்ளி, பள்ளி கல்வித் துறை ஆகியன சாா்பில், மாவட்ட அளவிலான மாணவா், மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள், 14, 17, 19 வயதுக்குள்பட்டோா் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன.
இதில், ஆண்கள் பிரிவில் 27 அணியினரும், பெண்கள் பிரிவில் 27 அணியினரும் பங்கேற்றனா். நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறும்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த போட்டியை, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலா் அந்தோணி அதிா்ஷ்டராஜ், மாவட்ட கால்பந்து கழக செயலா் லூா்து பீரீஸ், லசால் பள்ளித் தாளாளா் பிரெடி ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை, கால்பந்து பயிற்சியாளா் தா்மா், உடற்கல்வி ஆசிரியா் ஜெயக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.