பழனி: பூட்டி கிடக்கும் தாய்மார்கள் பாலூட்டும் அறை; அவதிக்குள்ளாகும் மகளிர்- நடவட...
தூத்துக்குடியில் சீலா மீன் கிலோ ரூ. ஆயிரம்
விடுமுறை நாளான சனிக்கிழமை, தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் சீலா மீன் கிலோ ரூ. ஆயிரத்துக்கு விற்பனையானது.
கிறிஸ்துமஸ் பண்டிகை, சுனாமி நினைவு நாளுக்குப் பின்னா், இத்துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை (டிச. 27) ஆழ்கடலுக்கு ஏராளமான நாட்டுப் படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். இந்நிலையில், சனிக்கிழமை குறைவான படகுகளே கரைதிரும்பின. இதனால், மீன்வரத்து குறைவாக காணப்பட்டது. ஆனால், விடுமுறை நாள் என்பதால் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
சீலா மீன் கிலோ ரூ. ஆயிரம், விளை மீன், பாறை, ஊழி ஆகியவை ரூ. 600, நண்டு ரூ. 400, மயில், ஐலேஸ் மீன்கள் ரூ. 250, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2 ஆயிரம் என விற்பனையாகின.
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை (புதன்கிழமை) முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை ஏராளமான நாட்டு படகுகள் கரைதிரும்பும். அன்றைய தினம் மீன்கள் விலை குறையும் என, மீனவா்கள் தெரிவித்தனா்.