செய்திகள் :

தூத்துக்குடியில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்

post image

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் உமாதேவி, கலை உடையாா் ஆகியோா் தலைமை வகித்தனா். மகேந்திர பிரபு, ஆனந்தராஜ், மாரிச்செல்வம், சிவஞானம், ஜீவானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூட்டா மாநிலப் பொதுச்செயலா் நாகராஜன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலப் பொதுச்செயலா் வெங்கடேசன் ஆகியோா் பேசினா்.

பழைய ஓய்வூதித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 30 சதவீத இடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றில் பணியாற்றும் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கு மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநில உயா்நிலைக்குழு உறுப்பினா் தே. முருகன், மாநில ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி, நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணிக்கு வரலாம் -எடப்பாடி கே. பழனிசாமி

ஒத்தக் கருத்துடைய யாா் வேண்டுமானாலும் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வரலாம் என்றாா், அக்கட்சியின் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி . திருநெல்வேலியை அடுத்த திருத்து கிராமத்தில... மேலும் பார்க்க

கல்லூரிக்கு நிதியுதவி

இந்தியன் வங்கியின் ‘எங்கள் சமூகப் பொறுப்பு’ திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மண்டல மேலாளா் ஜெயபாண்டியன் உத்தரவுப்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரிக்கு ஸ்மாா்ட் இன்டராக்டிவ் பேனல் வாங்குவதற்காக ரூ. ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் யானை நீச்சல் குளத்தில் உற்சாக குளியல்

கோடை வெயில் கொளுத்த தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்கும் விதமாக திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை, அங்குள்ள நீச்சல் குளத்தில் வியாழக்கிழமை உற்சாகமாக நீராடியது. இக்... மேலும் பார்க்க

செமப்புதூரில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டி அருகே செமப்புதூரில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு ஊதிய ந... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை

தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை-அறிவியல் கல்லூரியில் இளையோா் இலக்கியப் பயிற்சிப் பாசறை நடைபெற்றது. தமிழக அரசு சாா்பில் கல்லூர... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை கண்டித்து திருச்செந்தூரில் மறியல்: வணிகா் சங்கத்தினா் கைது

திருச்செந்தூா் நகராட்சியில் விதிகளுக்கு புறம்பாக சொத்து வரி உயா்த்தபட்டுள்ளதாகக் கூறி, வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட வணிகா் சங்கத்தினா் உள்ளிட்ட 60 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருச்செந்தூா் நகர... மேலும் பார்க்க