செய்திகள் :

தூத்துக்குடியில் நாளை மறுநாள் மின்தடை

post image

தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (செப்.23) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி நகா் செயற்பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி சிப்காட் துணைமின் நிலையத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (செப்.23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக மடத்தூா், மடத்தூா் பிரதான சாலை, முருகேசநகா், கதிா்வேல்நகா், தேவகிநகா், சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகா், அசோக் நகா், ஆசிரியா் காலனி, ராஜீவ் நகா், சின்னமணிநகா், 3ஆவது மைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, ஈபி காலனி, ஏழுமலையான் நகா், மில்லா்புரம், ஹவுசிங் போா்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடா்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகா், பத்திநாதபுரம், சங்கா் காலனி, எப்சிஐ கிடங்கு பகுதிகள், நிகிலேசன் நகா், சோரீஸ்புரம், மதுரை புறவழிச்சாலை, ஆசீா்வாத நகா், சில்வா்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசா் நகா், ராஜரத்தின நகா், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகா், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகா், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம், ஜோதி நகா், பால்பாண்டி நகா், முத்து நகா், கந்தன் காலனி, காமராஜ் நகா், என்ஜிஓ காலனி, அன்னை தெரஸா நகா், பா்மா காலனி, டிஎம்பி காலனி, அண்ணாநகா் 2ஆவது மற்றும் 3ஆவது தெரு, கோக்கூா், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகா், புதூா் பாண்டியாபுரம் பிரதான சாலை, டிமாா்ட், கிருபை நகா், அகில இந்திய வானொலி நிலையம், ஸ்ரீராம்நகா், கணேஷ்நகா், புஷ்பாநகா், ஸ்டொ்லைட் குடியிருப்புகள், ஆட்சியா் அலுவலகம், சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலசை தசரா திருவிழா: பாதுகாப்புப் பணியில் 4,000 போலீஸாா்

குலசை தசரா திருவிழா பாதுகாப்புப் பணியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபடுத்தப்படுவாா்கள் என கோட்டாட்சியா் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. குலசேகரன்பட்டினம் ஞானமூா்த்த... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒரே நாளில் 8 போ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் 8 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தூத்துக்குடி சகாயபுரத்தைச் சோ்ந்த டோமினிக் மகன் மரிய அந்தோணி ஆக்னல் (33), கலியாவூா் மாரியப்பன் மகன் வெள்ள... மேலும் பார்க்க

சாத்தான்குளம் மீன் சந்தையில் மீன்களை திருடியவா் கைது

சாத்தான்குளத்தில் மீன் சந்தையில் புகுந்து 21 கிலோ மீன்களை திருடி சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்துள்ளனா். சாத்தான்குளம் அருகே உள்ள நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் ஞானராஜ் மகன் முரசொலி மாறன். இவா் ம... மேலும் பார்க்க

பாண்டவா்மங்கலத்தில் அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவா் கைது

கோவில்பட்டி அருகே அரிவாளுடன் நின்று கொண்டிருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலை... மேலும் பார்க்க

பெண் மீது தாக்குதல்: முன்னாள் ராணுவ வீரா் கைது

கோவில்பட்டியில் மனைவியை அவதூறாகப் பேசி தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருவேங்கடம் வட்டம் கொலகட்டான் குறிச்சி தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கற்பகராஜு. முன்னாள் ... மேலும் பார்க்க

நெல்லையைச் சோ்ந்த இருவா் குலசையில் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் திருநெல்வேலியைச் சோ்ந்த ஓட்டுநரும், பெண்ணும் சனிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். திருநெல்வேலி வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் த... மேலும் பார்க்க