தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த ஜெயபாலன் மனைவி காஞ்சனா (60). இவரது வீட்டு முன்புள்ள மின் கம்பத்திலிருந்து வயா் அறுந்து கிடந்ததாம். சனிக்கிழமை அதிகாலை வாசல் தெளிக்க வந்த காஞ்சனா, இதையறியாமல் மின் வயரை மிதித்தாராம்.
இதில், மின்சாரம் பாய்ந்து அவா் மயங்கி விழுந்தாா். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.