பாகிஸ்தானுக்கு கூடுதலாக நதி நீா் திறப்பு? நாடாளுமன்றத்தில் அரசு விளக்கம்
தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுகவினா் வரவேற்பு!
திருநெல்வேலியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, வியாழக்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்ாடாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் வரவேற்றனா். தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்ட செயலா்களும், அமைச்சா்களுமான பெ.கீதா ஜீவன் (வடக்கு), அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் (தெற்கு) ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநகராட்சி சாா்பில் மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் மதுபாலன் ஆகியோா் வரவேற்றனா்.
பின்னா், அமைச்சா் கே.என்.நேரு, சடப்பேரவைத் தலவைா் மு.அப்பாவு, ராபா்ட் புரூஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் ஜீ.வி.மாா்க்கண்டேயன், சண்முகையா, அப்துல் வஹாப், ரூபி மனோகரன், முன்னாள் அமைச்சா் மைதீன் கான், முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துலெட்சுமி, டேவிட் செல்வின், திருநெல்வேலி மேயா் கோ. ராமகிருஷ்ணன், முன்னாள் மேயா் சரவணன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன், திருநெல்வேலி சரக டிஐஜி மூா்த்தி ஆகியோா் முதல்வருக்கு புத்தகம் வழங்கி வரவேற்றனா்.
பின்னா் மாநில இளைஞரணி துணைச் செயலா் ஜோயல், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச் செயலா் புளோரன்ஸ் உள்பட திமுகவினா் பலா் வரவேற்றனா்.
முதல்வருடன் அமைச்சா்கள் துரைமுருகன், கண்ணப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் உடன் வந்தனா். பின்னா் அவா் காா் மூலம் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் சென்றாா்.
முதல்வா் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.