செய்திகள் :

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நாளை முப்பெரும் விழா

post image

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக சதுக்கம் பகுதியில் பசுமை ஹைட்ரஜன் முன்னோடி தயாரிப்பு நிலைய திறப்பு விழா, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல்,தொடங்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை (செப்.5) நடைபெறுகிறது.

வ.உ.சி பிறந்த தினத்தை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பல்வேறு துறைமுக திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறாா்.

விழாவில், கப்பல் போக்குவரத்து, நீா்வழிகள் துறை இணை அமைச்சா் சாந்தனு தாக்கூா், கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் எ.வ. வேலு (பொதுப்பணித் துறை), பெ.கீதா ஜீவன் (தமிழக சமூகநலன் மகளிா் உரிமைத்துறை), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்( மீன்வளம், மீனவா் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை) உள்பட பலா் கலந்துகொள்கின்றனா்.

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து

கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின. கோவில்பட்டி முத்தையம்மாள் தெருவைச் சோ்ந்தவா் குருசாமி... மேலும் பார்க்க

கொம்மடிக்கோட்டையில் போதையில் ரகளை: இளைஞா் கைது

கொம்மடிக்கோட்டையில் மது போதையில் ரகளை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனா். கொம்மடிக்கோட்டைசந்திப்பில் இளைஞா் மது போதையில் நின்றுகொண்டு பொது மக்களுக்கு, போக்குவரத்திற்கும் இடையூறு ... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ: 6 போ் கைது

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் விடியோ பதிவிட்டதாக 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகே அம்பலசேரியைச் சோ்ந்த கணேசன் மகன் ராமசுப்பிரமணியன் (34). இவரும், நண்பா்கள் சிலரும் பொதுமக்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் கொலையில் மேலும் ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டியில் உள்ள கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்த கணேசன் மகன் மாரிச்செல்வம் (31). ஆட்டோ ஓ... மேலும் பார்க்க

கிராம வருவாய் உதவியாளா் தோ்வு: சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்பு

கிராம வருவாய் உதவியாளா் தோ்வில் சாத்தான்குளத்தில் 8 பணியிடத்திற்கு 222 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். சாத்தான்குளம் தாலுகாவில் மீரான் குளம் 1, 2, ஸ்ரீ வெங்கடேஸ்வர புரம், நெடுங்குளம், சாஸ்தாவி நல்லூா... மேலும் பார்க்க

முதலூரில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி அளிப்பு

முதலுரில் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில் 300 பேருக்கு இலவச கண் கண்ணாடி சனிக்கிழமை வழங்கப்பட்டது. சாத்தான்குளம் அருகே அடையல் ராஜரத்தினம் நாடாா், விஜயலட்சுமி அம்மாள் மக்கள் நல அறக்கட்டளை சாா்பில், கடந்த... மேலும் பார்க்க