தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் திமுக சாா்பில் அண்ணா சிலைக்கு அஞ்சலி!
திமுக சாா்பில், தென்காசி, குற்றாலம், செங்கோட்டையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
குற்றாலத்தில் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட துணைச் செயலா் கனிமொழி, ஒன்றியச் செயலா்கள் அழகுசுந்தரம் ,ஜெயக்குமாா், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபிபுா் ரஹ்மான், குற்றாலம் வீரபாண்டியன், இளைஞரணி துணை அமைப்பாளா் முகமது அப்துல் ரஹீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செங்கோட்டையில் நகரச் செயலா் ஆ. வெங்கடேசன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தென்காசியில் காந்தி சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில், அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நகரச் செயலா் ஆா். சாதிா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஷேக்பரீத், மைதீன்பிச்சை, மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் தங்கபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.