2,642 மருத்துவா் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு தொடக்கம்
தென் கொரியா: மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 5 பேர் மாயம்!
தென் கொரியாவில் மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் மாயாமகியுள்ளனர்.
அந்நாட்டின் ஜேஜு தீவின் கடல் பகுதியில் 10 பேர் பயணம் செய்த 32 டன் எடையுள்ள மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக இன்று (பிப்.12) இரவு 8 மணியளவில் அத்தீவின் சியோக்விபோ கடற்படையினருக்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கு சென்ற கடலோரக் காவல் படையினர் அந்த படகின் தென் கொரிய கேப்டன், 3 வியட்னாம் நாட்டு பணியாளர்கள் மற்றும் 1 இந்தோனேஷிய பணியாளர் ஒருவர் உள்பட 5 பேர் மீட்டுள்ளனர். மேலும், மாயமான 5 பேரை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதையும் படிக்க: ஆஸ்திரிய வலது சாரி தலைவரின் புதிய அரசமைக்கும் முயற்சிகள் தோல்வி!
சுமார் 20 கடலோர பாதுகாப்புப் படை, கடற்படை மற்றும் பொது மக்களுக்கு சொந்தமான படகுகளின் மூலம் இந்த மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் கொரியாவின் தற்காலிக அதிபர் சோய் சாங் மொக், மாயமான 5 பேரை விரைந்து கண்டுபிடிக்கவும், மீட்புப் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.