செய்திகள் :

தெருநாய்கள் விவகாரம்: "மனிதர்களுக்குச் செய்வதைப் போல நாய்களுக்குச் செய்யாமல் போனதால்" - மிஷ்கின்

post image

இயக்குநர் மிஷ்கின் வேலூரில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம், 'சினிமா துறையிலிருந்தே தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றனவே இதை எப்படிப் பார்க்கிறீர்கள். 2026-ல் அவருடைய அரசியல் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும்?' என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த மிஷ்கின், "நான் ஒரு சுத்தமான சினிமாக்காரன். அரசியலைப் பற்றி நான் எதுவும் கூறியதில்லை.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

தம்பி விஜய் தற்போது அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார். என்னைப் பொறுத்தவரை அவர் கடுமையான உழைப்பாளி. ரொம்ப நல்ல மனுஷன்.

அவரது அரசியல் பயணம் குறித்து நான் எதுவும் சொல்லமாட்டேன். அரசியலாக இதை முலாம் பூச வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து தெரு நாய்கள் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மனிதர்களுக்குக் கருத்தடை செய்வதைப் போல நாய்களுக்குச் செய்யாமல் போனதால் அது பெருகிவிட்டது.

தெரு நாய்
தெரு நாய்

உயிர் வதை கொடுமையானது. அதே நேரத்தில் நாய்களால் வரும் பாதிப்புகளைத் தடுக்கவும் வேண்டும். இந்த விஷயத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

`நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' - பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார்!

பழம்பெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் காலமானார். பாடலாசிரியர், கவிஞர், திரைக்கதையாசிரியர் எனப் பன்முகத் தன்மைக் கொண்டவர் பூவை செங்குட்டுவன். வயது மூப்புக் காரணமாக இன்று மாலை 5.45 மணியளவில் இயற்கை... மேலும் பார்க்க

காந்தி கண்ணாடி விமர்சனம்: இருவேறு மனிதர்களை அலசும் அகக்கண்ணாடி; நாயகனாக ஸ்கோர் செய்கிறாரா பாலா?

சென்னையில் செக்யூரிட்டியாகப் பணியாற்றிவரும் காந்தி மகான் (பாலாஜி சக்திவேல்), தன் மனைவி கண்ணம்மாவுடன் (அர்ச்சனா) வசித்து வருகிறார். ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்வைப் பார்த்தவுடன் கண்ணம்மாவின் மனதிலும் அதே ... மேலும் பார்க்க

Deva: "'மீசைய முறுக்கு 2'-வில் நடிக்காததற்குக் காரணம் இதுதான்" - இசையமைப்பாளர் தேவா ஓப்பன் டாக்

இசையமைப்பாளர் தேவாவின் மியூசிக் கான்சர்ட் நாளை கொழும்பில் நடக்கவிருக்கிறது.இந்தக் கான்சர்ட் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்று கான்சர்ட் தொடர்பாகவும் இன்னும் சில விஷயங்களும் குறித்தும் பேச... மேலும் பார்க்க

Vijay: "விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா?" - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பதில் என்ன?

"மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த தெய்வம், மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும்" என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கலகலப்பாகப் பேசினார்.நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த பிரபல திரைப்பட கலைஞர் ஐஸ்... மேலும் பார்க்க