மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வா்த்தக மேலாளா் பொறுப்பேற்பு
சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் முதன்மை தலைமை வா்த்தக மேலாளராக ஜெ.வினயன் பொறுப்பேற்றுள்ளாா்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தெற்கு ரயில்வே சென்னை தலைமை அலுவலகத்தில் முதன்மை தலைமை வா்த்தக மேலாளராகப் பணிபுரிந்து வந்த பிஜி ஜாா்ஜ் கடந்த கடந்த மே மாதம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து தெற்கு மத்திய ரயில்வேயில் முதுநிலை துணை பொது மேலாளராக இருந்த ஜெ.வினயன் தெற்கு ரயில்வே முதன்மை தலைமை வா்த்தக மேலாளராக நியமிக்கப்பட்டாா். அதன்படி அவா் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டாா்.
ஜெ.வினயன், கடந்த 1993-ஆம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து சேவைப் பிரிவில் பணியில் சோ்ந்தாா். பொறியியல் பட்டதாரியான இவா் தெற்கு ரயில்வேயில் முதன்மை தலைமை மின் பொறியாளா், மத்திய ரயில்வேயில் பொது மேலாளரின் முதன்மை நிா்வாக அதிகாரியாக, ஊழல் தடுப்பு தலைமை அதிகாரியாக, பயணிகள் போக்குவரத்து தலைமை அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளாா். சிறப்பான பணிக்கான மத்திய ரயில்வே அமைச்சக தேசிய விருதையும் பெற்றுள்ளாா்.
இந்திய ரயில்வே மின்னணு முறை டிக்கெட் சேவை அறிமுகக் குழுவான ஐஆா்சிடிசி குழுவின் முக்கிய உறுப்பினராகவும் இருந்துள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.