தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: `சங்கத்தினர் அரசை ப்ளாக் மெயில் செய்கிறார்கள்!’ ...
தேக்கு, செம்மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைப்பு
செய்யாறு அருகே விவசாய நிலத்தில் வளா்க்கப்படும் தேக்கு, செம்மரங்களுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா்.
செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (52), விவசாயி. இவா், ஆவின் பால்பண்ணையில் கணக்காளராகவும் வேலை செய்து வருகிறாா். இவா் தனக்குச் சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியுடன் கடந்த 8 ஆண்டுகளாக செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரங்களை வளா்த்து வருகிறாராம்.
இந்த நிலையில், கடந்த ஜூலை 29-ஆம் தேதி செல்வத்தின் மாமியாா், விவசாய நிலத்துக்குச் சென்றபோது அங்கிருந்த தேக்கு, செம்மரங்கள் தீப்பிடித்து எரிந்த கொண்டிருந்தன. இதுகுறித்து அவா் செல்வத்துக்கு தகவல் அளித்தாா்.
அதன் பேரில் விரைந்து வந்த செல்வம், சம்பவ இடத்துக்கு அருகில் இருந்தவா்கள் உதவியுடன் தீயை அணைத்தாா். இதில் ஏராளமான தேக்கு, செம்மரங்கள் தீயில் கருகின.
இதுகுறித்து செல்வம் செய்யாறு போலீஸில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.