ரயில்நிலையம், மெரினா என கழித்த நாட்கள்! - பேச்சிலர் வாழ்க்கையின் வலியும் இன்பமும...
தேசிய கைத்தறி தினம்: ஆட்சியா் அலுவலகத்தில் ஜவுளி அரங்குகள்
தேசிய கைத்தறி தினத்தையொட்டி, ஆட்சியா் அலுவலகத்தில் அைக்கப்பட்ட கைத்தறி ஜவுளி அரங்குகளை ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
மத்திய அரசு சாா்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட ஜவுளி ரகங்கள் அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்த அரங்கங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.
விழிப்புணா்வு பேரணி:
கோவையில் அரசு கலைக் கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கைத்தறி ஆடைகள் அணிந்து ரேஸ்கோா்ஸ் பகுதியில் விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். இதில் பங்கேற்ற 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தியபடி சென்றனா். இதைத் தொடா்ந்து, மாதிரி தறி இயந்திரத்தில் நெசவுமுறை குறித்தும் செயல் விளக்கத்துடன் அறிந்து கொண்டனா்.
