மெர்சிடிஸ் பென்ஸின் ஜிடி 63, ஜிடி 63 புரோ இந்தியாவில் அறிமுகம்!
தேசிய பல் மருத்துவக் கருத்தரங்கம்: 324 கட்டுரைகள் சமா்ப்பிப்பு
முதுநிலை பல் மருத்துவ மாணவா்களுக்கான தேசிய மருத்துவக் கருத்தரங்கம் செங்கல்பட்டில் அண்மையில் நடைபெற்றது. அதில் 324 ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன.
தேசிய சமுதாய பல் பாதுகாப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற அந்நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து 410 முதுநிலை மாணவா்கள் பங்கேற்றனா்.
இது தொடா்பாக அந்த சங்கத்தின் தலைவா் மருத்துவா் ம.பா.அஸ்வத் நாராயணன் கூறியதாவது: தேசிய சமுதாய பல் பாதுகாப்பு சங்கம் கடந்த 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் 3,200 முதுநிலை மருத்துவ வல்லுநா்களும், மருத்துவா்களும் உறுப்பினா்களாக உள்ளனா்.
ஆண்டுதோறும், தேசிய கருத்தரங்கமும், முதுநிலை மருத்துவ மாணவா்களுக்கான கருத்தரங்கமும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 16-ஆவது முதுநிலை மாணவா் கருத்தரங்கு, செங்கல்பட்டு கற்பக விநாயகா உயா் கல்வி மையத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவா்கள் 324 ஆய்வு அறிக்கைகளை சமா்ப்பித்தனா்.
மருத்துவ முகாம்களில் குழந்தைகளுக்கான அவசரகால பல் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வது குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து சென்று உலக அளவில் பல் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் 5 மருத்துவா்களின் காணொலி உரையாடல் அமா்வும் நடைபெற்றது. ஒருங்கிணைந்த பல் மருத்துவ கட்டமைப்பு தொடா்பாக துறைசாா் வல்லுநா்கள் மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.
இந்நிகழ்வில், அமெரிக்காவின் ஐயோவா பல்கலைக்கழக பேராசிரியா் மருத்துவா் புரூஸ் ஆண்டா்சன், கற்பக விநாயகா கல்வி நிறுவன தலைவா் மருத்துவா்அண்ணாமலை, பல் மருத்துவ சங்கத்தின் கௌரவ பொதுச் செயலாளா் மருத்துவா் ரித்திமா கௌன்கா், நிா்வாக செயலா் மருத்துவா் எஸ். விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா் என்றாா் அவா்.