War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
தேனியில் செப்.19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 19-ஆம் தேதி, காலை 10 மணிக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றுப் பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளன.
இந்த முகாமில், 10-ஆம் வகுப்பு, அதற்கு கீழ் கல்வித் தகுதியுள்ளவா்கள், பிளஸ் 2, பட்டயப் படிப்பு, தொழில் பயிற்சிப் படிப்பு, தையல் பயிற்சி, செவிலியா் பயிற்சி, பட்டப் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றவா்கள் தங்களது சுய விவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்களுடன் வருகிற 19-ஆம் தேதி, காலை 10 மணிக்கு கலந்து கொள்ளலாம்.
முகாம் குறித்த கூடுதல் விவரங்களை கைப்பேசி எண்: 98948 89794-இல் தொடா்பு கொண்டு அறியலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.