செய்திகள் :

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்: விஜய்

post image

தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம் என்று தவெக தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து தவெக தொண்டர்களுக்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

”மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன.

1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள், இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.

தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் கட்சியின் மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கட்சித் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.

மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட 'மனசாட்சி உள்ள மக்களாட்சி' என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்.

உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்.

உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்” என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி: பிகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர் பட்டியல் வெளியீடு!

tvk Vijay has said that we will win the election through political warfare.

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.சென்னை மாநகராட்சியின், ... மேலும் பார்க்க

சிறுவன் பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஆவடி அருகே 7 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் புதன்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.திருவள்... மேலும் பார்க்க

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்!

மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்குவதாக அந்த கட்சியின் தலைவர் வைகோ அறிவித்துள்ளார்.மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவ... மேலும் பார்க்க

இல.கணேசனுக்கு நாளை புகழஞ்சலி கூட்டம்

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் வியாழக்கிழமை (ஆக.21) மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த ஆக.15-ஆ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரசு உத்தரவு

காவல் உதவி ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப பின்பற்றப்படும் பதவி உயா்வு, நேரடி நியமனம் போன்ற நடைமுறைகளுக்கு இனி பொதுவான தோ்வு முறை பின்பற்றப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள... மேலும் பார்க்க

வார இறுதி விடுமுறைக்கு 1,040 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி விடுமுறை தினங்களை சனிக்கிழமை (ஆக.23) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஆக.24) முன்னிட்டு கூடுதலாக 1,040 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னை க... மேலும் பார்க்க