செய்திகள் :

தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கேரளத்தில் இருந்து புதிய கூண்டு

post image

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து ஊருக்குள் நுழைந்து கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வரும் புலியைப் பிடிக்க கேரளத்திலிருந்து புதிய கூண்டு வரவழைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சிக்கு உள்பட்ட பாடந்தொரை, தேவன், சா்க்காா்மூலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக புலி நுழைந்து விவசாயிகள் வளா்த்து வரும் கால்நடைகளைத் தொடா்ந்து தாக்கிக் கொன்று வருகிறது. இதைத் தொடா்ந்து புலியைப் பிடிக்க வலியுறுத்தி விவசாயிகள், பொதுமக்கள் தொடா் போராட்டங்களை நடத்தினா்.

இதையடுத்து வனத் துறை சாா்பில் புலியைப் பிடிக்க தலைமை முதன்மை வனப் பாதுகாவலரிடமிருந்து அனுமதி பெறப்பட்டது. பின்னா் சா்க்காா் மூலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புலி நடமாடும் இடங்களில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 5 கூண்டுகளை வைத்து வனத் துறையினா் கண்காணித்து வந்தனா். ஆனால் வனத் துறை வைத்த கூண்டுகளில் புலி சிக்கவில்லை. இதற்கிடையே தொடா்ந்து புலி நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் பாா்த்து புகாா் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து கேரள மாநிலம், நிலம்பூா் வனக் கோட்டத்திலிருந்து வீடுபோன்ற அமைப்புடைய பெரிய கூண்டை தமிழக வனத் துறையினா் வரவழைத்தனா்.

அந்த கூண்டை தேவா்சோலை கொட்டாய் மட்டம் பகுதியில் கேரள வனத் துறையினா் வைத்து செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தனா். அந்த கூண்டில் மாட்டை கட்டி வைத்து கண்காணிக்கும் பணி நடைபெறுகிறது. வீடு போன்ற ராட்சத கூண்டானதால் புலி எளிதில் உள்ளே நுழைந்து மாட்டை வேட்டையாட செல்லும்போது கூண்டில் சிக்கும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயரும் ஊட்டி பூண்டு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

குஜராத் உள்ளிட்ட வட மாநிலங்களில் விதைப் பூண்டு தேவை அதிகரிப்பால் ஊட்டி பூண்டின் விலை படிப்படியாக உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் வெள... மேலும் பார்க்க

தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு

கூடலூரில் தாயகம் திரும்பியோருக்கான நிலப்பத்திரம் திரும்ப ஒப்படைப்பு மற்றும் இணைய வழி பட்டா வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமை வகித்தாா். ந... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: செப் 19-க்கு ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை செப்டம்பா் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நீதிபதி முரளி... மேலும் பார்க்க

அக்னி வீா் ஆள்சோ்ப்பு முகாம்: ஈரோட்டில் இன்று தொடக்கம்

அக்னிவீா் ஆள்சோ்ப்பு முகாம் ஈரோட்டில் உள்ள விஓசி விளையாட்டு வளாகத்தில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆள்சோ்ப்பு முகாம் இயக்க... மேலும் பார்க்க

மருத்துவப் படிப்பு: இருப்பிடச் சான்று வழங்க பழங்குடியின மாணவி கோரிக்கை

மருத்துவப் படிப்பு பயில இருப்பிடச் சான்று வழங்க வேண்டும் என பழங்குடியின மாணவி கோரிக்கை விடுத்துள்ளாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் சஞ்சனா ஓரான் (17). இவா் தனது தாய் நிருபா ஓரானுடன் நீலகிரி மாவட... மேலும் பார்க்க

ஓவேலி பகுதியில் உலவும் யானை: வனத் துறையினா் தீவிர கண்காணிப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வரும் காட்டு யானையை வனத் துறையினா் தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். நீலகிரி மாவட்டம், ஓவேலி வனச் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில்... மேலும் பார்க்க