செய்திகள் :

தேவா இசை நிகழ்ச்சி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

post image

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி நடைபெறுவதை ஒட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி 15.02.2025 அன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிற்பகல் 3 மணி முதல்நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தோசிக்கப்பட்டுள்ளன.

மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மற்றும் வாடகை வாகனங்கள் (மஞ்சள் பலகை வாகனங்கள்) செனடாப் சாலை/காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2வது தெரு (நந்தனம் எக்ஸ்டென்ஷன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.

இதையும் படிக்க: மாநிலங்களவை மார்ச் 10 வரை ஒத்திவைப்பு!

சைதாப்பேட்டையிலிருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுப்பக்கம் வழியாகச் சென்று சேமியர்ஸ் சாலையில் "யு" டேர்ன் (வளைவு மூலம்) லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.

அண்ணா சாலையில் உள்ள ஒய்எம்சிஏ பிரதான சாலை நுழைவுவாயிலில் விவிஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள், மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல், இந்நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப்சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.

அண்ணாசாலையில் மதியம் 2 மணிமுதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

இந்நிகழ்ச்சிக்கு வரும் பார்வையாளர்கள் மெட்ரோ ரயில், மாநகர போக்குவரத்து பேருந்து மற்றும் மின்சார ரயில் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தலாம்.

'காதல்' என்கிற பேருணர்வு

நீங்கள் காதலிக்கும்போது உங்கள் மூளையில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? அறிவியல் ஆய்வாளர்கள், நரம்பியல் நிபுணர்கள் ஆய்ந்து ஆய்ந்து, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். காதல் என்பது ஒ... மேலும் பார்க்க

காதலர் நாள்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

காதலர் நாளையொட்டி இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.இயக்குநர் ஹனிப் அதேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடித்த மார்கோ திரைப்படம் சோனி லைவ் ... மேலும் பார்க்க

போக்சோ குற்றங்களுக்கு புதிய வரைவு அறிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ்

போக்சோ குற்றங்கள் தொடர்பாக 4 நாள்களில் புதிய வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங... மேலும் பார்க்க

திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்!

மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ரமேஷ் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுகவின் ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக ... மேலும் பார்க்க

இந்தாண்டு இறுதிக்குள் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலைய பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன்பின்னர், 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் பூந்த... மேலும் பார்க்க

கமல்ஹாசனுடன் உதயநிதி சந்திப்பு!

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துள்ளார். மேலும் பார்க்க