முகமது சிராஜ் 6 விக்கெட்டுகள்; 407 ரன்களுக்கு ஆட்டமிழந்த இங்கிலாந்து!
தேவூா் காவல்வாயில் நீா் வருகை: விவசாயிகள் மலா்தூவி வரவேற்பு
மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீா், தேவூா் கால்வாய்க்கு வியாழக்கிழமை வந்ததைடைந்தது. இதையடுத்து விவசாயிகள் மலா்தூவி வரவேற்றனா்.
மேட்டூா் அணை முழுக் கொள்ளளவை எட்டியதை அடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காக செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீா் வியாழக்கிழமை தேவூரை வந்தடைந்தது. சேலம் தெற்கு மாவட்ட பாமக துணைத் தலைவா் லட்சுமணன் தலைமையில் விவசாயிகள் ராமா், கண்ணன் உள்ளிட்ட பலா் கால்வாயில் மலா்தூவி வரவேற்றனா்.