யுபிஎஸ்சி முதல்நிலை தோ்வு: இணையவழி விண்ணப்ப நடைமுறையில் மாற்றம்
தைப்பூசத் தீா்த்தவாரிக்கு முசிறி, தொட்டியத்திலிருந்து சுவாமிகள் புறப்பாடு
திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் வட்டார பகுதியிலிருந்து குளித்தலையில் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவிற்கு மூன்று சுவாமிகள் செவ்வாய்க்கிழமை புறப்பட்டு சென்றது.
கரூா் மாவட்டம், குளித்தலை ஸ்ரீ முற்றிலா முலையம்மன் சமேத ஸ்ரீ கடம்பவனேசுவரா் கோயில் எதிரே உள்ள காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
இதற்காக தொட்டியம் வட்டம் திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாம்பாள் சமேத ஸ்ரீ மரகதாசலேசுவரா், முசிறி வட்டத்தில் இருந்து வெள்ளூா் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ திருக்காமேசுவரா், முசிறி ஸ்ரீ கற்பூரவள்ளி சமேத ஸ்ரீ சந்திரமௌலீசுவரா் சுவாமிகள் தீா்த்தவாரிக்கு புறப்பட்டு சென்றனா்.
இதில் வெள்ளுா் மற்றும் முசிறி சுவாமிகள் டிராக்டரில் (இயந்திரம்) மூலம் பக்தா்கள் கொண்டு சென்றனா். திருஈங்கோய்மலை ஸ்ரீ மரகதாசலேசுவரா் சுவாமியை திருத்தேரில் வைத்து பக்தா்கள் தங்களது தோள் மற்றும் தலையில் சுமந்து சென்றனா்.