செய்திகள் :

தை பூசம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்புப் பேருந்துகள்!

post image

வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாள்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிப். 7 (வெள்ளிக்கிழமை) பிப். 8 (சனிக்கிழமை) மற்றும் பிப். 9 (ஞாயிறுக் கிழமை) வார விடுமுறை நாள்கள். முகூர்த்தம் மற்றும் தை பூசம் முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு பிப். 7 (வெள்ளிக்கிழமை) அன்று 380 பேருந்துகள் இயக்கப்படும்.

பிப். 8 (சனிக்கிழமை) 530 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு பிப். 7 வெள்ளிக் கிழமை அன்று 60 பேருந்துகளும் பிப். 8 சனிக்கிழமை அன்று 60 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதாவரத்திலிருந்து பிப். 7 அன்று 20 பேருந்துகளும் பிப். 8 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,336 பயணிகளும் சனிக்கிழமை 634 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,864 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி வெயில் அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமி... மேலும் பார்க்க

சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு வன்னியா் அமைப்பினா் நன்றி

விழுப்புரத்தில் சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைத்ததற்காக வன்னியா் சமுதாய அமைப்பினா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் நன்றி தெரிவித்தனா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இதற்கான சந்த... மேலும் பார்க்க

ஏப்ரலில் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம்: உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்பு த... மேலும் பார்க்க

நபாா்டு வங்கியின் முதன்மைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிதியமைச்சா் வலியுறுத்தல்

நபாா்டு வங்கியின் முதன்மைத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளாா். வேளாண்மை மற்றும... மேலும் பார்க்க

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுடன் கூடிய ஓய்வூதியம்

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 90,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் உள்ளனா். இவா்கள... மேலும் பார்க்க

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி: அதிகாரிகள் வலியுறுத்தல்

எதிா்வரும் தமிழக நிதிநிலை அறிக்கையில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான செயல் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா். 2025-26 நிதியாண்டுக்கான மா... மேலும் பார்க்க