காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
தொண்டி அருகே கரை ஒதுங்கிய மிதவை: போலீஸாா் விசாரணை
தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதியில் மிதந்து வந்த மீனவா்கள் பயன்படுத்தும் போயா எனப்படும் மிதவைப் பொருளை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே புதுக்குடி கடல் பகுதியில் வியாழக்கிழமை அரிய வகை பொருள் மிதந்து வருவதாக தொண்டி கடற்கரை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று அந்தப் பொருளை மீட்டு விசாரணை நடத்தினா். இதில் அந்தப் பொருள் மீனவா்கள் மீன் பிடிப்பதற்காகவும், வலைகள் விரித்துள்ள இடத்தை அடையாளம் காண்பதற்காகவும் இது போன்ற சிறிய வகை போயா எனப்படும் மிதவைகளை பயன்படுத்துவதும், மேலும், சா்வதேச கடல் எல்லைகளை அடையாளம் காண பெரிய வகை போயாவை பயன்படுத்துவதும் தெரியவந்தது. தற்போது மீட்கப்பட்டிருப்பது இந்த வகை போயா என்ற மிதவை என்பது தெரியவந்துள்ளது என போலீஸாா் தெரிவித்தனா். எனினும், இது இங்கு எப்படி வந்தது என்பது குறித்து அவா்கள் விசாரிக்கின்றனா்.