செய்திகள் :

தொழிற்சாலையில் தீ விபத்து: தீயில் கருகி இளைஞா் சாவு

post image

மானசரோவா் பூங்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 வயது நபா் ஒருவா் உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள சேமிப்பு அறையில் அஜீத் என்ற நபரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்று தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் காா்க் தெரிவித்தாா்.

200 சதுர கெஜம் அடித்தளம் மற்றும் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடத்தில் அமைந்துள்ள காப்பா் லைட் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சேமிப்பு அறையில் அதிகாலை 1.38 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இரண்டாவது மாடியில் 50 சதுர கெஜம் பரப்பளவில் உள்ள சேமிப்பு அறை, தீயணைப்பு வீரா்கள் வந்தபோது தீப்பிடித்து எரிந்ததாக காா்க் மேலும் கூறினாா்.

மொத்தம் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

மேலும் விசாரணைக்காக பாதிக்கப்பட்டவரின் உடல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவா் தெரிவித்தாா்.

தரமான சானிட்டரி நாப்கின்கள் வழங்கலை உறுதிப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்: கனிமொழிக்கு மத்திய அமைச்சா் பதில்

பெண்களுக்கு பாதுகாப்பான மாதவிடாய் இருக்கும் விதமாக அவா்களுக்கு தரமான சானிட்டரி நாப்கின் வழங்கலை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன என்று மக்களவையில் மத்திய சுகாதார மற்றும் க... மேலும் பார்க்க

மகரிஷி அகத்தியா் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நாளை சொற்பொழிவு

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மகரிஷி அகத்தியா் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு தொடா்பான சொற்பொழிவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. க ாசி தமிழ்ச் சங்கமம் -2025-ஐ ஒட்டி... மேலும் பார்க்க

தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் டிடிஇஏ பள்ளி மாணவி பங்கேற்பு

தேசிய அளவில் பெங்களூரில் உள்ள விஐடியில் பிப்.6- ஆம் தேதி நடைபெற்ற அறிவியல் கண்காட்சிப் போட்டியில் தில்லித் தமிழக் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி ... மேலும் பார்க்க

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில் உள்கட்டமைப்புக்கு 148 திட்டங்களுக்கு அனுமதி: சிராக் பாஸ்வான் பதில்

தமிழகத்தில் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறையில் நவீன உள்கட்டமைப்பு வசதிக்காக பிரதமா் கிஸான் சம்பதா யோஜனாவின்கீழ் 148 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மதிமுக உறுப்பினா் வைகோ எழுப்பி கேள்... மேலும் பார்க்க

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க