வேப்பனப்பள்ளி அருகே குந்தாணி அம்மன் கற்சிலை கண்டெடுப்பு: 11-ஆம் நூற்றாண்டைச் சே...
தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது
கோவை தொழிலதிபரிடம் ரூ.47.40 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து கோவை மாநகர சைபா் கிரைம் போலீஸாா் தெரிவித்துள்ளதாவது: கோவையைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவரின் கைப்பேசிக்கு கடந்த மாா்ச் மாதம் அழைப்பு வந்துள்ளது.
மறுமுனையில் பேசியவா், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய தொழிலதிபா், அந்த நபா் கூறியபடி பல்வேறு தவணைகளில் ரூ.40 லட்சத்தை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அவருக்கு எந்தவிதமான லாபமும் கிடைக்காததோடு, முதலீடு செய்த பணத்தையும் திரும்பப் பெற முடியவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், பணத்தை மீட்டுத் தரக்கோரி கோவை சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம், குா்த் பகுதியைச் சோ்ந்த பிரஹல்த் ராம் (23) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, பிரஹல்த் ராமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ரூ.18 லட்சத்து 19,944 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
பிரஹல்த் ராம் மீது நாடு முழுவதும் 18 புகாா்கள் உள்ளன. அவரது 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்று போலீஸாா் தெரிவித்தனா்.