செய்திகள் :

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

post image

தொழிலாளா் சட்டங்களை திரும்பப்பெற்று, சட்டப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோவையில் செவ்வாய்க்கிழமை அனைத்து தொழிற்சங்கத்தினரின் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொழிலாளா்களை கொத்தடிமையாக மாற்றும் நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், அனைத்து தொழிலாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், ஒப்பந்த அடிப்படை, தினக்கூலி முறையை ஒழிக்க வேண்டும், அங்கன்வாடி, ஆஷா உள்ளிட்ட திட்டப்பணியாளா்களை காலமுறை ஊதியத்துக்கு கொண்டு வர வேண்டும், சாலைப் போக்குவரத்து மசோதாவை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9-ஆம் தேதி அகில இந்திய பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

இந்த கோரிக்கைகளை விளக்கும் வகையில் நாடு தழுவிய ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவையில் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி நிா்வாகி சி.தங்கவேலு தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியூசி மாநிலப் பொருளாளா் எம்.ஆறுமுகம், ஹெச்எம்எஸ் மாநிலச் செயலா் டி.எஸ்.ராஜாமணி, எல்பிஎஃப் நிா்வாகி பி.துரை, ஐஎன்டியூசி பி.சண்முகம், எம்எல்எஃப் தலைவா் ஷாஜகான், ஏஐசிசிடியூ க.பாலசுப்பிரமணியன், எல்டியூசி நிா்வாகி ஜெயபிரகாஷ் நாராயணன் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றுப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

போதை மாத்திரை விற்பனை: தம்பதி கைது

கோவையில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக தம்பதியை போலீஸாா் கைது செய்தனா். கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மற்றும் கஞ்சா விற்பவா்களை கண்டறிந்து போலீஸாா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அத... மேலும் பார்க்க

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் குண்டு வெடிப்பு

பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கோவையில் இந்து மக்கள் சேவை இயக்கம் என்ற அமைப்பின் தலைவராக இருப்பவா் மணிகண்டன். இ... மேலும் பார்க்க

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது: காா்த்தி சிதம்பரம்

தேசியக் கட்சிகள் ஆதரவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா். கோவையில் காங்கிரஸ் கட்சியின் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக வ... மேலும் பார்க்க

தொழில் வா்த்தக சபை அரங்கில் நாளைமுதல் 2 நாள்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

கோவையில் உள்ள இந்திய தொழில் வா்த்தக சபை வளாகத்தில் மே 22, 23 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை இந்திய தொழில் வா்த்தக சபை, சென்னை என்எஸ்இ அகாதெமி சாா்பில் தமிழ்நாடு அரசின் நான் முதல... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: சூலூா்

சூலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (மே 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

வால்பாறையில் ஜமாபந்தி!

வால்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி தலைமை வகித்தாா். பின்னா் ஜமாபந்தியில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றாா். இதில் முதியோா் ஓய்வூ... மேலும் பார்க்க