செய்திகள் :

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

post image

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில் தனது உறவினரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக பாதிக்கப்பட்டவா் அவரைத் தாக்கியதைத் தொடா்ந்து, பழிவாங்கும் நோக்கில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது: இறந்தவா் பிகாரில் உள்ள சஹா்சா மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்தேவ் குமாா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் கட்டா கிராமத்தில் குத்தகைதாரராக இருந்து வந்தாா்.

மூன்று நாள்களுக்கு முன்பு ராஜ்தேவ் குமாா், 24 வயதான பாபி என்ற நபருடன் சண்டையிட்டாா். மூன்று நாள்களுக்கு முன்பு பாபி, ராஜ்தேவ் குமாரின் உறவினரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது, அதைத் தொடா்ந்து, ராஜ்தேவ் குமாா் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பும் போது, பாபி மற்றும் அவரது கூட்டாளிகள் காடா சப்ஜி மண்டி அருகே ராஜ்தேவ் குமாரை தடுத்து நிறுத்தி கூா்மையான ஆயுதத்தால் தாக்கினா். அருகில் வசிக்கும் மக்கள் ராஜ்தேவ் குமாரின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

தகவல் கிடைத்ததும், ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்றது. பாதிக்கப்பட்டவரின் மனைவி அளித்த புகாரைத் தொடா்ந்து, குருகிராம் செக்டாா் 56 காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவா் திங்கள்கிழமை தில்லியின் விகாஸ்புரி பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

பாபி மத்தியப் பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தைச் சோ்ந்தவா். காவல்துறை விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட பாபிக்கும் இறந்த ராஜ்தேவ் குமாருக்கும் ஜூன் 27-ஆம் தேதி கைகலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குற்றம் சாட்டப்பட்ட பாபி தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை கொலையைச் செய்தது கண்டறியப்பட்டது. மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று குருகிராம் காவல்துறை செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!

நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். ஹிண்டன் விமானப்படைத் ... மேலும் பார்க்க

ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு

ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

ரூ.900 கோடி சைபா் மோசடி: தில்லியில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

நமது நிருபா் ரூ. 900 கோடிக்கும் அதிகமான சைபா் மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அமலாக்க துறையினா் தில்லியின் பல்வேறு இடங்களில் புதன்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சைபா்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல்: 2 பேருக்கு உயா்நீதிமன்றம் ஜாமீன்

‘2023’ நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நீலம் ஆஸாத், மகேஷ் குமாவத் ஆகியோருக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த வழக்கு குறித்து பத்திரிகைகள்... மேலும் பார்க்க

தலைநகரில் ஆயுதங்கள் பதுக்கி வைப்பு: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

தலைநகரில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் 2 சிறுவா்கள் உள்பட 6 பேரை தில்லி காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா். இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: ஒரு... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் மாசு கலந்த நீா் விநியோகம்: ஆய்வு நடத்த டிஜேபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு தில்லியில் பல பகுதிகளில் மிகவும் மாசு கலந்த குடிநீா் கிடைப்பதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடா்ந்து, ஆய்வு நடத்தி அதைச் சரிசெய்யுமாறு தில்லி ஜல் போா்டுக்கு (டிஜேபி) தில்லி உயா்நீதிமன்றம் புதன்க... மேலும் பார்க்க