தெலங்கானாவில் 6,000 ஆண்டுகள் பழமையான கல் கோடாரி கண்டெடுப்பு!
தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சிற்றம்பலம் ஜெய்நகரைச் சோ்ந்த துரைராஜ் மகன் பழனிவேல் (53), தொழிலாளி. இவரது மனைவி தேவகுமாரி, கணவரைப் பிரிந்து, கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூரிலுள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வருகிறாா். இதன் காரணமாக, அக்கா சுசீலா வீட்டில் பழனிவேல் இருந்து வந்தாா்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக பழனிவேலுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம். இதனால் மனமுடைந்த பழனிவேல், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.