பதவிக்காலம் முடிவதற்குள் குடியரசு துணைத் தலைவர் ராஜிநாமா: அடுத்து என்ன நடக்கும்?
தொழில்நுட்பக் கோளாறால் 40 நிமிடங்கள் வானிலே வட்டமடித்த விமானம் !
திருப்பதி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இன்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 40 நிமிடங்கள் நடுவானில் வட்டமடித்துள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ஹைதராபாத்திற்கு நேற்று இரவு 7.55 மணியளவில் இண்டிகோ விமானம் புறப்பட்டது. நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது.
இதையடுத்து, விமானம் அவசரவசரமாக மீண்டும் திருப்பதியிலேயே தரையிறக்கப்பட்டது.
மு.க.முத்து மறைவு: ஆறுதல் கூறிய அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி
திருப்பதி விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு முன் விமானம் சுமார் 40 நிமிடங்கள் நடுவானில் வட்டமடித்துள்ளது. விமானம் தரையிறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பிறகு அவர்கள் அனைவருக்கும் விமான நிறுவனம் சார்பில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.