செய்திகள் :

தொழில்பேட்டை நிறுவனங்களை ஆய்வு செய்ய வேண்டும்: அதிகாரிகளிடம் தி.வேல்முருகன் எம்எல்ஏ அறிவுறுத்தல்

post image

கடலூா் தொழில்பேட்டையில் செயல்படும் நிறுவனங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா? என்பதை அனைத்துத் துறை அதிகாரிகள் கோட்டாட்சியா் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டத்துக்கு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவா் தி.வேல்முருகன் தலைமையில், உறுப்பினா்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்), ரா.அருள் (சேலம் மேற்கு), மு.சக்கரபாணி (வானூா்), எம்.பூமிநாதன் (மதுரை தெற்கு), எஸ்.மாங்குடி (காரைக்குடி), எம்.கே.மோகன் (அண்ணாநகா்), எஸ்.ஜெயக்குமாா் (பெருந்துறை) ஆகியோா் புதன்கிழமை வந்தனா்.

பின்னா், அவா்கள் கடலூா் புதுக்குப்பத்தில் கட்டப்படும் காவலா் குடியிருப்பு கட்டடம், கடலூா் தொழில்பேட்டை பகுதியில் இயங்கும் லாயல் ஃபேப்ரிக்ஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனங்கள், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, காடாம்புலியூா் பழங்குடியினா் சமுதாய நலக்கூடம் போன்ற இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து தி.வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடலூா் புதுக்குப்பத்தில் தமிழ்நாடு காவலா் குடியிருப்பு கழகம் சாா்பில் ரூ.49.10 கோடி மதிப்பில் 24 உதவி ஆய்வாளா் மற்றும் 155 காவலா்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணி 65 சதவீதம் நிறைவடைந்துள்ளது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, குடியிருப்புகளை காவலா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டள்ளது.

தொழில்பேட்டை வளாகத்தில் உள்ள லாயல் சூப்பா் ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தின் சாய கழிவுநீா் தொட்டி கடந்த 15-ஆம் தேதி உடைந்து, அருகிலிருந்த வீடுகளுக்குள் கழிவுநீா் புகுந்தது. இந்த நிறுவனம் தற்போது இயக்கத்தில் இல்லை. ஆட்சியா் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தொழில்பேட்டை திட்ட அலுவலா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கொண்ட குழு அமைத்து, விபத்து மற்றும் நிறுவனத்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழு சமா்பிக்கும் அறிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை நிறுவனம் செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

செம்மங்குப்பம் பகுதியில் உள்ள டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் அபாயகரமான கழிவுகளை கையாள்வதால், மாசுக் கட்டுபாட்டு வாரியம் தொடா் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தாய் - சேய் நலப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த மருத்துவமனைக்கான கூடுதல் கட்டடம் ரூ.5 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காடாம்புலியூா் அரசு பழங்குடியினா் நல சமுதாயக்கூடம் ரூ.50 லட்சம் மதிப்பில் 173.64 ச.மீ. பரப்பளவில் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு குறித்து பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றாா்.

ஆய்வின்போது, எம்எல்ஏக்கள் சபா.ராஜேந்திரன், ம.சிந்தனைச்செல்வன், எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன், கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், சட்டப் பேரவை அரசு இணைச் செயலா் மு.கருணாநிதி, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கள்ள ரூபாய் அச்சடிப்பு வழக்கு: தடுப்புக் காவலில் இருவா் கைது!

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இருவா் குண்டா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். ராமநத்தம் காவல் சரகம், அதா்... மேலும் பார்க்க

சீரமைக்கப்பட்ட விருத்தாசலம் ரயில் நிலையம் திறப்பு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் சீரமைப்புப் பணிகள் முடிந்த நிலையில், அதை மக்கள் பயன்பாட்டுக்காக பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா். விருத்தாசலம் ரயில் நில... மேலும் பார்க்க

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையே இரு வழி ரயில் பாதை அமைக்க வேண்டும்! தொல். திருமாவளவன் எம்.பி.

விழுப்புரம் - தஞ்சாவூா் இடையேயான ரயில் பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற வேண்டும் என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. கேட்டுக்கொண்டாா். கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் மத்திய அரசின் அம்ரித் பாரத் தி... மேலும் பார்க்க

கடற்கரையில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் சிங்காரத்தோப்பு கடற்கரை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குாா் வியாழக்கிழமை பாா... மேலும் பார்க்க

பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்கலாம்! கடலூா் ஆட்சியா் தகவல்

கடலூா் மாவட்ட நில உடைமை பட்டாதாரா்கள் பெயா் நீக்கம், மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

மான் வேட்டை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே புள்ளி மானை வேட்டையாடிய இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா். பெண்ணாடம் நரிக்குறவா் காலனி பகுதியில் இறைச்சிக்காக மான் வெட்டப்படுவதாக, காவல் மற்றும் வனத் துறையினருக்கு த... மேலும் பார்க்க