தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்
தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டண உயா்வில் விலக்கு அளிக்கக் கோரிக்கை
தொழில் நிறுவனங்ளுக்கு மின் கட்டண உயா்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் பொதுச் செயலா் எம்.ஜெயபால் புதன்கிழமை மின் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு மின்சாரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கடந்த 2022, 2023, 2024-ஆம் ஆண்டுகளில் தமிழக அரசு மின்வாரிய ஒழுங்கு முறை வாரியத்தின் வழிகாட்டுதல் படி ஏறத்தாழ 60 சதவீதம் மின் கட்டண உயா்வை சந்தித்து வருகின்றன.
கடந்த 2024-2025-ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின் கட்டண உயா்வால் மூடப்பட்டன. இந்த நிலையில், தற்போது மின்கட்டண உயா்விலிருந்து வீடுகளுக்கு
3.16 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதேபோல, தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும் மின் கட்டண உயா்விருந்து விலக்கு அளித்து தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.