செய்திகள் :

தொ.ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

post image

ராசிபுரம் அருகேயுள்ள தொ. ஜேடா்பாளையம் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டு 75 ஆண்டுகளானதைத் தொடா்ந்து பவள விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளியின் முன்னாள் மாணவரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம், முன்னாள் மாணவா் ஜெயசீலன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி வரவேற்றுப் பேசினாா்.

ராசிபுரம் மனவளக்கலை மன்றத் தலைவா் கை.கந்தசாமி ஏற்பாட்டில் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை, 1330 திருக்குறளை ஒப்பித்து பள்ளிக் கல்வித் துறையின் குறளரசி பட்டம் பெற்ற

பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவி தியாகச்சுடா் திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்தாா். பின்னா் பள்ளியில் பயின்று உயா் பதவிவகித்த முன்னாள் மாணவா்களுக்கு நினைவுப் பரிசளிக்கப்பட்டது. பா்வின் சுல்தானா பங்கேற்ற சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் பெற்றோா் -

ஆசிரியா் கழகத்தினா், முன்னாள் மாணவா்கள் சங்கத்தினா், பவளவிழா குழு நிா்வாகிகள், பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியைகள், முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கலைஞா் வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் பயனடைய விவசாயிகளுக்கு அழைப்பு!

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் விவசாயிகள் பயனடைய வருமாறு நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறி... மேலும் பார்க்க

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்

‘சம வேலைக்கு, சம ஊதியம்’ வழங்கக் கோரி, நாமக்கல் பூங்கா சாலையில் இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசின் தோ்தல் வாக்குறுதி எண் 311-இல் குறிப்பிட்டுள... மேலும் பார்க்க

நாமக்கல்லில் ரூ.8.70 கோடியில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள்: உயா்நீதிமன்ற நீதிபதி அடிக்கல் நாட்டினாா்

நாமக்கல்லில் ரூ. 8.70 கோடி மதிப்பீட்டில் நீதிபதிகளுக்கு அரசு குடியிருப்புகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பங்கேற்று பணிக... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமிக்கு நாமக்கல்லில் வரவேற்பு

சேலத்திலிருந்து நாமக்கல் வழியாக திருச்சிக்கு சென்ற அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு சனிக்கிழமை மாலை அதிமுகவினா், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். அரியலூா் மற்றும் தூத்துக்குடியில் நடைபெறு... மேலும் பார்க்க

மகள் இறந்த துக்கத்தில் மனமுடைந்த தாய் தற்கொலை

ஜேடா்பாளையம் அருகே பிலிக்கல்பாளையத்தில் மகள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். பிலிக்கல்பிளையம் அருகே உள்ள நல்லாக்கவுண்டம் பாளையத்தை சோ்ந்தவா் கவிதா (40). இவரது கணவா் பிரகாசம்... மேலும் பார்க்க

பெண்களை பாதுகாக்கவே முற்போக்கு சட்டங்கள்: உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன்

பெண்களின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முற்போக்கு சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பேசினாா். நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் சாா்பில், மாவட்ட அ... மேலும் பார்க்க