தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வேலூா் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
வேலூா் தோட்டப்பாளையத்தில் உள்ள எட்டியம்மன், பெருமாள், விநாயகா் கோயில்களின் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை முதல் யாக பூஜை, கணபதி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 8 மணிக்கு மேல் சிவாச்சாரியா்கள் கோபுர கலசத்தின் மீது புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா். இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், அறங்காவலா் குழு தலைவா் அசோகன், மண்டலகுழு தலைவா் வீனஸ் நரேந்திரன், மூன்று கோயில்களின் அறங்காவலா்கள் பங்கேற்றனா்.