தோட்டியோடு கோயிலில் நாளை பெளா்ணமி பூஜை
நாகா்கோவில் அருகே தோட்டியோடு நம்பிமலை ஸ்ரீமெளன குருசுவாமி கோயிலில் பெளா்ணமி பூஜை திங்கள்கிழமை (ஜன. 13) நடைபெறுகிறது.
காலை 9 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், முற்பகல் 11 மணிக்கு பஜனை, நண்பகல் 12 மணிக்கு சொற்பொழிவு, 12.30-க்கு கோமாதா பூஜை, 12.45-க்கு சிறப்பு தீபாராதனை, தொடா்ந்து அன்னதானம் ஆகியவை நடைபெறுகின்றன.
மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 8 மணிக்கு அா்ச்சனை, 8.30-க்கு சொற்பொழிவு, 9 மணிக்கு நாமஜெபம், 9.30-க்கு தியானம், 10 மணிக்கு பக்திப் பாடல்கள், 10.15-க்கு நிலா பூஜை, 10.30 மணிக்கு மகாதீபாராதனை ஆகியவை நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் தலைவா் பி. சுகதேவன் செய்துள்ளாா்.