முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
தோழியை திருமணம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட நடிகை - உண்மை வெளிப்பட்டதால் கண்டித்த ரசிகர்கள்!
மலையாள சின்னத்திரையில் 'கூடெவிடே' என்ற சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை பிரார்த்தனா. இவரது தோழி ஆன்ஸி. ஆன்ஸி மாடலாக உள்ளார். சில நாட்களுக்கு முன் நடிகை பிரார்த்தனாவும், ஆன்ஸியும் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்துகொள்ளும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவை தங்கள் சமூக வலைத்தள கணக்கில் ஷேர் செய்தனர்செய்தனர் பிரார்த்தனாவும், ஆன்சியும்.
'எனது தோழியும், மாடலுமான ஆன்ஸியை திருமணம் செய்துகொண்டேன்' என்ற தகவலையும் அந்த வீடியோவுடன் பகிர்ந்திருந்தார் பிரார்த்தனா. மேலும், 'மனதில் விஷம் நிறைந்தவர்கள், மனிதர்கள் முன்னிலையில் நடிப்பவர்கள், குறுகிய மனம்படைத்தவர்கள் விலகியிருங்கள்' எனவும் நடிகை பிரார்த்தனா பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் இருவரும் பூமாலைகளை மாற்றிக்கொள்வதுடன், ஒருவருக்கொருவர் தாலி கட்டிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும். இருவரும் நெற்றி வகிட்டில் திலகமிட்டுக்கொள்வதும், கட்டி அணைத்து முத்தமிடும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன. அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தனர். அது உண்மையான திருமணம் என நினைத்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஒரே பாலின திருமணத்தை ஆதரித்து சமூக செயற்பாட்டாளர்களும் பதிவிட்டிருந்தனர்.

உண்மையானது இல்லை
ஆனால், அந்த திருமண உண்மையானது இல்லை எனவும். ரீல்ஸ்க்காக மட்டுமே எடுக்கப்பட்டதாகவும் ரசிகர்களின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக வீடியோ வெளியிட்டதாகவும் நடிகை பிரார்த்தனா மற்றும் ஆன்ஸி ஆகியோர் இப்போது வீடியோமூலம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நடிகை பிரார்த்தனா கூறுகையில், "சமீபத்தில் எனது தோழியை திருமணம் செய்வது போன்று நான் ஒரு ரீல்ஸ் வெளியிட்டு இருந்தேன். கேரளாவைச் சேர்ந்த ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்வதற்காகத்தான் அந்த வீடியோவை வெளியிட்டோம். ஏற்கனவே தெலுங்கு நடிகைகள் இதுபோன்று ஒரு ரிலீஸ் வெளியிட்டிருந்தனர். அதை ரீ கிரியேட் செய்துதான் அந்த வீடியோவை வெளியிட்டோம்.
வைரல் ஆவதற்காகத்தான் தோழியை திருமணம் செய்வது போன்று வீடியோ வெளியிட்டேன். அதை ரசிகர்கள் வைரல் ஆகிவிட்டனர். பாசிட்டிவ் கமெண்டுகள்தான் அதிகமாக வந்திருந்தது. வித்தியாசமாக என்ன செய்தாலும் மலையாள ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். அந்த ரீல்ஸில் இடம்பெற்றிருந்த எனது தோழி ஆன்ஸி-க்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகனும் இருக்கிறான். அந்த ரீல்ஸில் அவரது குழந்தையும் இடம்பெற்றிருந்தது" என்றார்.

திருமணம் குறித்து விளக்கமளித்து வெளியிட்ட வீடியோவிலும் ஆன்சி இடம்பெற்றிருந்தார். உண்மை தெரிந்த ரசிகர்கள் அவர்கள் கண்டனம் தெரிவித்து பின்னூட்டமிட்டு வருகின்றனர். 'ஒரே பாலினத்தை சேர்ந்தவரை திருமணம் செய்வதுபோன்று, கேலியாக வீடியோ எடுத்து பரப்பியது, உண்மையாக நடக்கும் ஒரே பாலின திருமணத்தை அவமதிக்கும் செயல்' என ரசிகர்கள் கமெண்டில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...