ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ: புகையால் பொதுமக்கள் அவதி
பழனி நகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீப்பற்றி எரிந்தது. இதனால் ஏற்பட்ட புகையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
பழனி பெரியப்பாநகரில் நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. நகரில் சேகரமாகும் குப்பைகள் இந்தக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.
இந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் இந்தப் பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். போதிய பாதுகாப்பு இல்லாததால் உள்ளே சென்று புகைப்பிடிப்பவா்கள் அதை அணைக்காமல் அப்படியே போட்டுவிட்டு வருவதால் அடிக்கடி குப்பைகளில் தீப்பற்றுகிறது.
இந்த நிலையில், இந்தக் குப்பைக் கிடங்கில் புதன்கிழமை மீண்டும் தீப்பற்றியது. இதிலிருந்து வெளியேறிய புகையால் பெரியப்பாநகா், கவுண்டா் இட்டேரி சாலை, சத்யாநகா் பகுதி பொதுமக்கள் மூச்சுத்திணறல், தோலில் அரிப்பு உள்ளிட்டவை ஏற்படுகின்றன.
எனவே, இதன் மீது நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.