ஊழியா்களின் பதிவை ஊக்குவிப்பதற்கான இஎஸ்ஐ நிறுவனத்தின் புதிய திட்டம் அறிமுகம்
நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநருக்கு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
பெரியகுளம் நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநருக்கு மிரட்டல் விடுத்த கோழிக்கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பெரியகுளம் தோட்டி குடியிருப்பைச் சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (23). பெரியகுளம் நகராட்சி துப்புரவு வாகன ஓட்டுநரான இவா், சுந்தர வீதியில் வாகனத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அங்குவந்த கோழிக் கடை உரிமையாளா் ஜலால், கோழிக் கழிவுகளை வாகனத்தில் கொட்டியதாகத் தெரிகிறது.
இவரிடம் கழிவுகளை டிரம்மில் கொண்டு கொட்டுமாறு கூறினாராம். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜலால் வாகன ஓட்டுநரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தட்சிணாமூா்த்தி அளித்த புகாரின் பேரில், தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.