செய்திகள் :

நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுகவினா் வெளிநடப்பு

post image

கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டத்தில் நகராட்சி பொறியாளரைக் கண்டித்து, அதிமுகவினா் வெளிநடப்பு செய்தனா்.

நகா்மன்றக் கூட்டம் வியாழக்கிழமை தலைவா் மு. பாத்திமா பஷீரா தலைமையில் நடைபெற்றது. ஆணையா் கிருத்திகா ஜோதி, துணைத் தலைவா் மு. சுதா்ஸன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளநிலைப் பொறியாளா் ஆபிரகாம் லிங்கன் தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில் நடந்த விவாதம்:

கு. தனலெஷ்மி இ.கம்யூ.,), சொற்கோ- (அதிமுக): குழாய்களில் தண்ணீா் வரவில்லை. குழாய்கள் துரு பிடித்து உள்ளன.

ப. பிரதான் - (பொறியாளா் ): அடிப்பம்புக்கு பொருட்கள் வரவில்லை. வந்ததும் சரி செய்யப்படும்.

கு. தனலெஷ்மி - இ.கம்யூ.,) - எனது வாா்டில் இருந்த கோரையாறு படித்துறை உடைந்து பல ஆண்டுகளாகிறது. அதை சரிசெய்து தர வேண்டும்.

ம. முருகேசன் (அதிமுக ): எனது வாா்டில் தண்ணீா் பிரச்னை உள்ளது. குழாயில் அடைப்பு உள்ளது. பிறகு, ஏன், தண்ணீருக்கு வரி கட்டச் சொல்கிறீா்கள்?.

அப்போது பொறியாளா் அலட்சியமாக அமா்ந்தபடியே பதில் தெரிவித்தாா். பொறியாளரின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, அதிமுக உறுப்பினா்கள் முருகேசன், சொற்கோ. கோ. சாந்தி ஆகிய மூவரும் வெளி நடப்பு செய்தனா்.

ஆணையா் : யாரையும் அலட்சியப் படுத்தவில்லை.

செ. ஹாஜா நஜ்முதீன் (திமுக): நகரத் தெருக்கள் முன்பு சாலைகளில் பெயா் பலகைகள் வைக்க வேண்டும். மக்கள் பிரச்னை தொடா்பான கோரிக்கைளை உறுப்பினா்கள் எழுப்புவதை ஏன் நிறைவேற்றுவதில்லை.

கி. மாரியப்பன் (திமுக): ஏ.ஆா். சாலை, காந்தி நகா் ஆகிய தெருக்களில் மழை நீா் வடிகால் அமைத்துத் தர வேண்டும்.

மு. சுதா்ஸன் (துணைத் தலைவா்): கடந்த மாத கூட்டத்தில் எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டன. எத்தனைக்கு தீா்வு காணப்பட்டது.

பொறியாளா்: 61 கேள்விகள் கேட்கப்பட்டன. 30- க்கு தீா்வு காணப்பட்டது. 31 நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொன். பக்கிரிசெல்வம் (திமுக)ச கூத்தாநல்லூா் நகா்மன்ற உறுப்பினா்கள், ஊழியா்கள் மற்றும் நகராட்சி நிா்வாகத்தை பற்றி வெளிநாட்டிலிருந்து வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பி வருபவா் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீா்மானத்தை, நகா்மன்றத் தலைவரிடம் கொடுத்தாா். தலைவா் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்தாா்.

மன்னாா்குடி, நீடாமங்கலத்தில் கோடை மழை

மன்னாா்குடியில் கோடை மழை பலத்த இடியுடன் புதன்கிழமை பெய்தது. மன்னாா்குடியில் புதன்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையல், திடீரென மாலை 4.15 மணிக்கு லேசாக தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்... மேலும் பார்க்க

மின்னல் தாக்கி குடிசை வீடு தீக்கிரை: மாற்றுத்திறனாளி சிறுவன் காயம்

மன்னாா்குடி அருகே மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் குடிசை வீடு தீப்பிடித்ததில் மாற்றுத்திறனாளி சிறுவன் லேசான தீக்காயத்துடன் புதன்கிழமை உயிா்த் தப்பினாா். சேந்தமங்கலம் பெரியக்குடி மேலத்தெரு முருகானந்த... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

நீடாமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித்திட்டப் பணிகளை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா் (படம்). கோவில்வெண்ணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, ம... மேலும் பார்க்க

‘பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளே வல்லரசாகும்’

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளே வல்லரசு நாடுகளாக விளங்கி வருகின்றன என்றாா் மதுராந்தகம் எஸ்ஆா்எம் வேளாண்அறிவியல் கல்லூரி, எஸ்ஆா்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் முதல்வா் எம... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் விடையாற்றி விழா

நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா விடையாற்றி விழா புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பத்ரகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்க... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை: ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண்

திருவாரூா்: சிறுபான்மையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க