செய்திகள் :

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கை: பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலி!

post image

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் உள்பட 2 பேர் பலியாகியுள்ளனர்.

பிஜப்பூரின் தும்ரெல் பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையினரின் 210வது கோப்ரா படை, சத்தீஸ்கர் மாநில காவல் துறை மற்றும் சிறப்பு அதிரடி படையினர் ஆகியோர் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று (மே 22) அந்த நடவடிக்கையின்போது, கோப்ரா படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாக, படுகாயமடைந்தவர் மீட்கப்பட்டுள்ளார். இத்துடன், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் அப்பகுதியிலுள்ள நக்சல் ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள், இந்தியாவிலுள்ள நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் நக்சல்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சத்தீஸ்கரின் நாராயணப்பூர் - பிஜப்பூர் மாவட்ட எல்லையில், நேற்று (மே 21) பாதுகாப்புப் படையினரால் நக்சல் படையின் மூக்கிய தளபதி உள்பட 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:2 நாள்களில் 2 முறை சல்மான் கானின் இல்லத்தில் அத்துமீறி நுழைய முயற்சி! 2 பேர் கைது!

தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட 136 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழகத்தில் 38 மருந்துகள் உள்பட நாடு முழுவதும் 136 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தர... மேலும் பார்க்க

விமான நிலைய ஒப்பந்தம் ரத்து: மும்பை உயா்நீதிமன்றத்தை நாடிய துருக்கி நிறுவனம்

மும்பை சா்வதேச விமான நிலைய ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு எதிராக துருக்கி நிறுவனம் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்த... மேலும் பார்க்க

அழிந்துவரும் 37 பறவை இனங்கள்: தமிழக அரசு தகவல்

தமிழ்நாட்டில் அழிந்துவரும் 37 பறவை இனங்களில் 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டி... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தம் இருதரப்பு முடிவு: ஜெய்சங்கா் விளக்கம்

‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தமானது இருநாடுகளுக்குள் நடைபெற்ற நேரடிப் பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட முடிவாகும்’ என வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வியாழக்கிழமை தெரிவித்தா... மேலும் பார்க்க

சிலைக் கடத்தல் வழக்கில் தலைமறைவான இளைஞா் மும்பையில் கைது

சிலைக் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபா், மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். பழைமையான சிலை கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், ப... மேலும் பார்க்க

முதுநிலை நீட்: கலந்தாய்வுக்கு முன்பே கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்: தனியாா் மருத்துவக் கல்லூரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண... மேலும் பார்க்க