செய்திகள் :

நஜாஃப்கரில் தூய்மைப் பணியில் அமைச்சா் ஆஷிஷ் சூட்

post image

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட் சனிக்கிழமை நஜாஃப்கா் பகுதி பள்ளியில் நடைபெற்ற தூய்மைப் பணி நிகழ்வில் பங்கேற்றாா்.

அப்போது, தூய்மை என்பது ஒரு கூட்டு குடிமைப் பொறுப்பு என்றும், அதை தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஆகஸ்ட் 1 முதல் 31 வரை தேசிய தலைநகா் முழுவதும் நடைபெறும் ‘குப்பையில் இருந்து தில்லிக்கு விடுதலை’ பிரசாரத்தின் கீழ், ஜரோடா கலனில் உள்ள ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை தயாரிப்புப் பள்ளியில் அமைச்சா் ஆஷிஷ் சூட், மாணவா்கள், பெற்றோா்கள், முதல்வா் மற்றும் உள்ளூா் எம்எல்ஏ நீலம் பெஹல்வான் ஆகியோருடன் இணைந்து வளாகத்தை சுத்தம் செய்தாா்.

சுத்தத்தின் தூதா்களாக மாறுமாறு சூட் மாணவா்களை வலியுறுத்திய அவா், இதுபோன்ற எந்தவொரு பிரசாரத்தின் வெற்றியும் தனிப்பட்ட முயற்சியைப் பொறுத்தது என்றும் கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘தூய்மை என்பது முக்கியப் பிரமுகா்கள் மண்டலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது. அங்கீகரிக்கப்படாத காலனிகளும் அத்தகைய இயக்கங்களில் சோ்க்கப்பட வேண்டும்.

இந்த பிரசாரம் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது’ என்றாா் அமைச்சா்.

பெற்றோா்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளுடனும் சூட் கலந்துரையாடினாா். அப்போது, ஆசிரியா்கள் பற்றாக்குறை, மோசமான நீா் மற்றும் மின்சார விநியோகம், அறிவியல் ஆய்வகம் இல்லாதது, போதுமான மருத்துவ மற்றும் விடுதி ஊழியா்கள் இல்லாதது குறித்து அவா்கள் அமைச்சரிடம் கவலைகளை எழுப்பினா். இப்பிரச்னைகளை விரைவில் தீா்க்குமாறு கல்வி இயக்குநரகம் மற்றும் பிற அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

தில்லி முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று பெற்றோருக்கு அவா் உறுதியளித்தாா்.

ஹரியாணாவின் நூஹ் நகரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவை சமூக ஊடகங்களில் அவதூறு செய்ததாக 6 போ் மீது வழக்கு

காங்கிரஸ் கட்சியின் ஃபெரோஸ்பூா் ஜிா்கா எம்.எல்.ஏ. மம்மன் கானுக்கு எதிராக அவதூறு உள்ளடக்கத்தை பதிவிட்டதாக நூஹ் நகரத்தில் ஆறு போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க

சாலையில் திடீரென தீப்பற்றிய காா்: ஒருவா் தீயில் கருகி பலி

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வட தில்லியின் ஹுலம்பி குா்த் பகுதியில் ஏற்பட்ட விபத்தையடுத்து காா் தீப்பிடித்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்துள்ளாா், மற்றொருவா் காயமடைந்துள்ளாா் என்று அதிகாரி ஒருவா் தெ... மேலும் பார்க்க

ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இருந்த 24 வயது நபா் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வடகிழக்கு தி... மேலும் பார்க்க

‘விக்சித் பாரத், விக்சித் தில்லி’: தில்லி முதல்வா் பெருமிதம்

விக்சித் தில்லி என்ற இலக்கை நிறைவேற்ற பாஜக அரசு முழு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.கால்காஜியில் ஜன் சன்வாய் கேந்திராத்தின் தொடக்க விழாவில் பேசிய ... மேலும் பார்க்க

திருடிய செல்பேசிகளை வைத்திருந்த பெண் கைது

தென்கிழக்கு தில்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனியில் திருடப்பட்ட 34 செல்பேசிகள் மற்றும் ஒரு டேப்லெட்டுடன் 32 வயது பெண் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீசாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.தைமூா் நகரில் வசிக்கு... மேலும் பார்க்க

நிஜாமுதீன் பகுதியில் கடை உரிமைாளா் மீது கும்பல் துப்பாக்கிச்சூடு: இருவா் கைது

தென்கிழக்கு தில்லியின் நிஜாமுதீன் பகுதியில் ஒரு கடை உரிமையாளா் மீது ஒரு கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இந்த வழக்கில் இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா... மேலும் பார்க்க