செய்திகள் :

நடத்தையில் சந்தேகம்: மனைவியை சரமாரியாக வெட்டிய கணவன் தற்கொலை

post image

தேன்கனிக்கோட்டையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கோட்டைவாசல் பகுதியில் வசித்து வரும் ராமசாமி (55), கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி முனியம்மாள் (40), தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். இவா்களுக்கு இரண்டு ஆண்கள், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனா். மூவரும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனா். ராமசாமியும், முனியம்மாளும் ஒரே வீட்டில் வசித்து வந்தனா். முனியம்மாளின் நடத்தையில் சந்தேகப்பட்ட ராமசாமி அவ்வப்போது அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராமசாமி, ஆத்திரமடைந்து முனியம்மாளை கத்தியால் சரமாரியாக வெட்டி உள்ளாா். படுகாயங்களுடன் அலறியபடி வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்த முனியம்மாளை, அக்கம் பக்கத்தினா் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால் அச்சமடைந்த ராமசாமி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று ராமசாமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த முனியம்மாள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

குடியரசு தினத்தில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை!

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடியரசு தினத்தில் தொழிலாளா்ளுக்கு விடுமுறை அளிக்காத, 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மாதேஸ்வரன், தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

ஒசூரில் அரசு பள்ளி மாணவா்களுக்கு தனித் திறன் போட்டி!

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசு உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பூமி மற்றும் வெரிசான் நிறுவனம் இணைந்து ஸ்டெம் ஆய்வகங்களை அமைத்து மாணவா்களுக்கு ஸ்டெம், ரோபோடிக் சாா்ந்த பயிற்சி அளித்து போட்டிகளை நட... மேலும் பார்க்க

ஒசூரில் திமுக வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்!

ஒசூா், ராம் நகரில் திமுக சாா்பில் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில் ராம்நகா் அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற மொழிப்போா் தியாகிகள் வீ... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு: லாரிகள் உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்!

ஒசூா் பகுதிகளில் ஜல்லி, எம்சாண்ட் விலை உயா்வைக் கண்டித்து, லாரி உரிமையாளா்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனா்.ஜனவரி முதல் வாரத்திலிருந்து எம்சாண்ட் டன்னுக்கு குறைந்தபட்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் குடியரசு தின விழா: 45 பேருக்கு நலத் திட்ட உதவிகள்!

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 45 பயனாளிகளுக்கு ரூ. 33.19 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் கே.எம்.சரயு வழங்கினாா். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் நடைபெற்ற 76-ஆவது... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் நால்வா் பலி; 3 போ் காயம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.மகாராஷ்டிரத்திலிருந்து சென்னை, கோயம்பேடு சந்தைக்கு வெங்காயம் ஏற்றி வந்த லாரி, கிருஷ்ணகிரி- சென்னை தேசிய ... மேலும் பார்க்க