ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீ...
நடிகர் குரியகோஸ் ரங்கா காலமானார்!
நடிகரும் திரை எழுத்தாளருமான குரியகோஸ் ரங்கா உடல்நலக்குறைவால் காலமானார்.
இயக்குநர் விசுவின் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றியவர் குரியகோஸ் ரங்கா என்கிற ரங்கநாதன். விசுவின் மைத்துனரான இவர், ’அவள் சுமங்கலிதான்’ படத்தில் குரியகோஸ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் ரங்கா என்கிற தன் பெயருடன் குரியகோஸை இணைத்துக்கொண்டார்.
விசு இயக்கிய மணல் கயிறு திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியவர் ஊருக்கு உபதேசம் (திரைக்கதை, வசனம் எழுதினார்), நாலு பேருக்கு நன்றி, முத்துக்கள் உள்ளிட்ட படங்களிலும் கவனம் ஈர்க்கும் கதாபாத்திரங்களில் நடித்தார்.
ஆச்சரியமாக, சினிமாவுக்கு வருவதற்கு முன்பே 1000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்த அனுபவம் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆர்வமாக செயல்பட்டு வந்த குரியகோஸ் ரங்கா நேற்று (செப். 1) இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.