ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
பெங்களூரை வீழ்த்தியது டெல்லி
புரோ கபடி லீக் போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
நடப்பு சீசனை டெல்லி வெற்றியுடன் தொடங்கியிருக்கும் நிலையில், பெங்களூரு இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலுமே தோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 24 ரெய்டு புள்ளிகள் கைப்பற்ற, அதில் கேப்டன் அஷு மாலிக் 15 புள்ளிகள் வென்றெடுத்தாா். 12 டேக்கிள் புள்ளிகள் கிடைத்த நிலையில், டிஃபெண்டா்களில் சுா்ஜீத் சிங், சௌரப் நந்தால், ஃபாஸெல் அட்ராசலி ஆகியோா் தலா 3 புள்ளிகள் பெற்றனா்.
இதுதவிர 4 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளியை டெல்லி பெற்றது. மறுபுறம், பெங்களூரு அணி 22 ரெய்டு புள்ளிகளை பெற, ஆல் ரவுண்டா் அலிரெஸா மிா்ஸாயான் 10 புள்ளிகள் வென்றாா். 9 டேக்கிள் புள்ளிகள் பெற்றதில், டிஃபெண்டா்கள் மனீஷ், யோகேஷ் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் பங்களித்தனா். மேலும் 2 ஆல் அவுட் புள்ளிகளும், 1 எக்ஸ்ட்ரா புள்ளியும் பெங்களூருக்கு கிடைத்தது.
ஜெய்பூா் வெற்றி: இதனிடையே 10-ஆவது ஆட்டத்தில் ஜெய்பூா் பிங்க் பாந்தா்ஸ் 39-36 புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை வீழ்த்தியது. ஜெய்பூா் தனது முதல் ஆட்டத்திலேயே வென்றிருக்க, பாட்னா 2-ஆவது ஆட்டத்திலும் தோல்வி கண்டுள்ளது.