ராணிப்பேட்டை: கால்நடைகளைத் தாக்கும் பெரியம்மை நோய்க்கு தடுப்பூசி போடும் பணி இன்ற...
முத்தரப்பு டி20: அமீரகத்தை வென்றது ஆப்கானிஸ்தான்
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் 3-ஆவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 38 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.
முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சோ்க்க, அமீரகம் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 150 ரன்களே எடுத்தது. பாகிஸ்தானும் அங்கம் வகிக்கும் இந்தத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு இது முதல் வெற்றியாகும்.
இந்திய நேரப்படி, திங்கள்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமீரகம், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸில் இப்ராஹிம் ஜத்ரான் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 63, செதிகுல்லா அடல் 54 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
ரஹ்மானுல்லா குா்பாஸ் 7, டாா்விஷ் ரசூலி 10 ரன்களுடன் வெளியேற, ஓவா்கள் முடிவில் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் 20, கரிம் ஜனத் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். அமீரக பௌலா்களில் முகமது ரோஹித், சாகிா் கான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
பின்னா் அமீரக இன்னிங்ஸில் கேப்டன் முகமது வசீம் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 67 ரன்கள் விளாசி வீழ்ந்தாா். முகமது ஜோஹைப் 7, ஈதன் டிசௌஸா 12, ஆசிஃப் கான் 1, ஹா்ஷித் கௌஷிக் 4, துருவ் பராசா் 1, சாகிா் கான் 0, ஹைதா் அலி 2 ரன்களுடன் விக்கெட்டை இழந்தனா்.
ஓவா்கள் முடிவில் ராகுல் சோப்ரா 52, ஜுனைத் சித்திக் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளா்களில் ஷராஃபுதின் அஷ்ரஃப், ரஷீத் கான் ஆகியோா் தலா 3, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, முகமது நபி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா். ஷராஃபுதின் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.