செய்திகள் :

நடுவர்களுடன் வாக்குவாதம் ஏன்? ஷுப்மன் கில் விளக்கம்!

post image

சன்ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் நடுவருடன் ஷுப்மன் கில் வாகுவாதம் செய்தது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

அகமதாபாத் திடலில் நடந்த நேற்றைய (மே.2) போட்டியில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 224/6 ரன்கள் எடுக்க, ஹைதராபாத் 20 ஓவா்களில் இழந்து 186/6 ரன்களே சோ்த்தது.

இந்த வெற்றியின் மூலம் குஜராத் பிளே ஆஃப் பந்தயத்தில் நிலைக்க, ஹைதராபாத் அந்த வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

முதலில் குஜ்ராத் பேட்டிங்கின்போது ஷுப்மன் கில் ரன் அவுட் என 3-ஆம் நடுவர் கூறியது சர்ச்சையானது.

பின்னர், பந்துவீச்சில் 13.4ஆவது ஓவரில் பிரசித் கிருஷ்ணா வீசிய பந்துக்கு எல்பிடபில்யூ கொடுக்கப்படவில்லை என குஜராத் சார்பில் ரிவிவ் எடுக்கப்பட்டது.

இம்பாக்ட் அம்பயர்ஸ் காலில் இருந்ததால் நாட் அவுட் எனக் கொடுக்கப்பட்டது. இதனால் குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் களத்தில் இருந்த நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரே நாளில் இரண்டுமுறை இப்படியானதுக்கு ஷுப்மன் கில் மீது பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து போட்டிக்குப் பின்னர் ஷுப்மன் கில், “எனக்கும் நடுவர்களும் சில உரையாடல்கள் இருந்தன. சில நேரங்களில் நீங்கள் 110 சதவிகித உழைப்பினைக் கொடுக்கும்போது உணர்ச்சிகள் மிகுதியால் இப்படி நடக்கும்” என்றார்.

புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி 2-ஆம் இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி தற்போதைக்கு முதலிடத்தில் நீடிக்கிறது.

வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டு வர தோனியிடம் பேச வேண்டும்: சேவாக்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார். க... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; முதலிடத்துக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை: டேனியல் வெட்டோரி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக தான் ஒருபோதும் கூறவில்லை என அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டொரி தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி... மேலும் பார்க்க

மகிழ்ச்சியாக இருக்க விரும்பியதால் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினேன்: விராட் கோலி

இந்திய அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதில் மகிழ்ச்சி என விராட் கோலி தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?

ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போகும் என்ற பரபரப்பு அதிகரித்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளும் தலா 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாட... மேலும் பார்க்க