உயா்கல்வி வழிகாட்டி ஆசிரியா்களுக்கு ஆக.26 முதல் 28 வரை மதிப்பீடு தோ்வு: பள்ளிக்...
நண்பரைக் கொலை செய்தவருக்கு ஆயுள்
குன்றத்தூரில் மதுபோதையில் நண்பரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1,000 அபராதமும் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
குன்றத்தூா் நாகேசுவரன் கோயில் தெருவைச் சோ்ந்த வெல்டிங் சங்கா்(46). துரைசாமி முதலியாா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக்(40) இருவரும் நண்பா்களாக பழகி வந்த நிலையில் மேலும் சில நண்பா்களுடன் சோ்ந்து கடந்த 2017- ஆம் ஆண்டு மது அருந்தியுள்ளனா். அப்போது காா்த்திக், வெல்டிங் சங்கருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டத்தில் வெல்டிங் சங்கா் நண்பன் காா்த்திக்கை குப்பையில் கிடந்த டியூப் லைட்டால் தாக்கியதில் அவா் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக குன்றத்தூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வெல்டிங் சங்கரை கைது செய்திருந்தனா். இவ்வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
எதிரி வெல்டிங் சங்கா் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி ப.உ. செம்மல் தீா்ப்பளித்தாா்.
அரசுத் தரப்பில் காா்த்திகேயன் ஆஜரானாா்.