செய்திகள் :

நமக்குள்ளே...

post image

நம் குடும்ப அமைப்பு, ‘குழந்தை பெற்றுக் கொண்டால்தான் நீ பெண் என்கிற முழுத் தகுதியை அடைவாய்’ என்றே காலங்காலமாக பெண்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறது. பெண் குழந்தை பிறந்தால், ‘ஆண் குழந்தைதான் வேணும்’ என்று அடம்பிடிக்கும். ஆண் குழந்தை பிறந்தால், ‘ஒன்றுக்கு ஒன்று துணை வேண்டும், இன்னொன்று பெற்றுக்கொள்’ என்று பிடித்துத் தள்ளும்.

வீடுதான் இப்படி என்றால், நாடும் விதிவிலக்கல்ல. ‘பெண்கள், மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் சொல்லியிருக்கிறார். இது, பெண் உடம்பின் மீதான ஆணாதிக்கத்தின் நீட்சியே.

மக்கள்தொகையில் சென்ற ஆண்டுதான் 1.4 பில்லியனுடன் முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது இந்தியா. இந்நிலையில்தான், ‘இந்தியாவில் குழந்தை பிறக்கும் விகிதம் 2.1 என்பதாக உள்ளது. இதற்கும் கீழ் சென்றால், சமுதாயமே அழிந்துவிடும். எனவே, பெண்கள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று குரல் கொடுத்திருக்கிறார்.

இவர் இப்படி என்றால், கிராமப்புறங்களிலும், இஸ்லாமிய சமூகத்திலும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்வது தொடர்கிறது. இதை மதரீதியாகவே ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். அத்துடன் பலதார மணங்களையும் போற்றுகிறார்கள்.பெண் உடல் மீதான இதுபோன்ற ஆணாதிக்கங்கள், மத ஆதிக்கங்கள், அரசியல் ஆதிக்கங்கள் இப்படி தொடர்கதை ஆவது ஏன்?

இந்தியாவில் மட்டுமல்ல... தைவான், தென்கொரியா, சிங்கப்பூர், உக்ரைன், ஹாங்காங், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் எனப் பல நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு என்பது பூதாகரப் பிரச்னையாக எழுந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் காரணங்கள் பற்பல இருக்கலாம். ஆனால், பெரும்பாலான நாடுகளிலும் காணப்படும் முக்கியக் காரணம்... மொத்தப் பொறுப்புகளும் பெண்ணின் மீதே திணிக்கப்படுவதுதான்.குழந்தையை வளர்த்தெடுப்பதில் குடும்பத்தினர் மற்றும் கணவரின் உதவி இல்லாமல், தனித்தேதான் செயல்பட வேண்டியிருக்கிறது. வீடு, அலுவலகம் என்கிற இரட்டைச் சுமைகள் கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கின்றன. இதெல்லாம்தான், குழந்தை என்பதிலிருந்தே ‘விட்டுவிடுதலை’யாக வைக்கிறது, பெண்களை.

இவ்விஷயத்தில், அத்தனை நாடுகளுமே செய்ய வேண்டியது... இத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிடக் கூடாது. மாறாக, குழந்தை வளர்ப்பில் பெண்களுக்கு உதவும் தொழிலாளர்நலக் கொள்கைகள், பணி, தொழில் சூழல், சமூக ஒத்துழைப்பு, குடும்பங்களில் பொறுப்புப் பகிர்வு, மகளிர் மற்றும் குழந்தைநல சுகாதார மேம்பாடு போன்றவற்றிலெல்லாம் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்களின் சுய முடிவு உரிமை எப்போதும் நமக்கு வழங்கப்பட வேண்டுமே தவிர, நம் கருப்பையில் ஆணாதிக்கமோ, அரசியலோ, அரசோ ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதிருப்போம் தோழிகளே. இனி யாரும் மேடைகளிலும் சபைகளிலும் போகிற போக்கில் பெண் உடல் மீதான ஆதிக்கப் பேச்சை விதைத்து விட்டுப் போகாமல் இருக்க, ஒவ்வொரு முறையும் எதிர்வினையாற்றுவோம் தீவிரமாக!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

Doctor Vikatan: பெண்கள் தினமும் இரவில் பால் குடிக்கலாமா... அது உடல் எடையை அதிகரிக்குமா?

Doctor Vikatan: என் வயது 48. எனக்குப் பல வருடங்களாக இரவில் தினமும் பால் குடிக்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தினமும் பால் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அதைத் தவிர... மேலும் பார்க்க

Hormone: பெண்களின் தோழி இந்த ஹார்மோன்... எல்லா மாற்றங்களுக்கும் இதுதான் காரணம்..!

ஒரு பெண்ணை வளைவு நெளிவுகளுடன், மார்பகங்களில் கொழுப்புத் திசுக்களுடன் பெண்மையாகக் காட்டுவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான். இதைத் தவிர, ஈஸ்ட்ரோஜன் பெண்களுக்கு செய்கிற மற்ற நன்மைகள் என்னென்ன; ஒரு பெண்ணின் உடல... மேலும் பார்க்க

Doctor Vikatan: 55 வயதிலும் தொடரும் பீரியட்ஸ்... சந்தோஷமா, சங்கடமா?

Doctor Vikatan: என்உறவுக்கார பெண்ணுக்கு 55 வயதாகிறது. இன்னும் பீரியட்ஸ் நிற்கவில்லை. 'நின்னாதான் பிரச்னை... மெனோபாஸ் கஷ்டங்களைத் தாங்க முடியாது. பீரியட்ஸ் வந்தா நல்லதுதான்' என்கிறார். இது சரியானதுதானா... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக மாறுமா?

Doctor Vikatan: என்உறவுக்கார பெண்ணுக்கு 60 வயதாகிறது. பத்து வருடங்களுக்கு முன்பே மெனோபாஸ் வந்துவிட்டது. கடந்த ஒரு வருடமாகவேஅவருக்கு அடிக்கடி வயிற்றுவலி, வயிற்று உப்புசம், அஜீரணம் என வயிறு தொடர்பான பிர... மேலும் பார்க்க