போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
நரிக்குடி ஒன்றியத்தில் புதிய நியாய விலைக் கடைகள்! அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்!
விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள், கலையரங்குகளை நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருச்சுழி சட்டப்பேரவைத் தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் பூம்பிடாகை கிராமத்தில் ரூ. 9.45 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, வி. கரிசல்குளம், சேந்தநதி ஆகிய கிராமங்களில் தலா ரூ. 7.50 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்குகங்கள், சிறுவனூா் கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக் கூடம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.9.77 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடம், நாலூா் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 6.50 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழல்குடை, ரூ. 9.77 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை ஆகியவற்றை அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்தாா்.
அப்போது, அமைச்சரிடம் சிறுவனூா், நாலூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் எங்களது கிராமங்களிலிருந்து பள்ளிக்குச் சென்று வர பேருந்து வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இந்தக் கிராமங்களில் உரிய நேரங்களில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவா்களிடம் அமைச்சா் உறுதியளித்தாா்.